ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி


ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி
x
தினத்தந்தி 31 March 2022 9:24 AM IST (Updated: 31 March 2022 11:43 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே  சோலூர் பகுதியில் தேசிய நெஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் பெண் தொழிலாளர்கள் 3 பேர் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

தொழிற்சாலைப் பணிக்கு 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் விபத்துக்குள்ளானது. விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர்.  

தடுப்பு சுவரின் மறுபக்கத்திற்கு சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொழிற்சாலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story