மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா...!
மேலூர் அருகே கேசம்பட்டியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டியி உள்ள பிடாரன் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு கேசம்பட்டி, அருக்கம்பட்டி, பட்டூர், கம்பூர், சேக்கிபட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அதிகாலை குவிந்தனர்.
பின்னர், காலை 6 மணி அளிவில் இத்தகைய பாரம்பரிய மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதில் பங்கேற்றவர்கள் கச்சா, வலை, குத்தா, கூடை போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர்.
இதில் கட்லா, ரோகு, விரால், கெழுத்தி உள்ளிட்ட மீன்களை சாதி, மத பேதமின்றி ஒன்றாக கண்மாய்குள் இறங்கி பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றனர்.
Related Tags :
Next Story