ஈரோடு: தேங்காய் உடைக்கும் போராட்டம் - பாஜக எம்.எல்.ஏ உட்பட 20 பேர் கைது...!
ஈரோடு அருகே தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், கோவில் நிலத்தை மீட்க கோரி, 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி கலந்து கொண்டுடார். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கு போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story