பெண்கள் தலைநிமிர தன்னம்பிக்கை வேண்டும்


பெண்கள் தலைநிமிர தன்னம்பிக்கை வேண்டும்
x
தினத்தந்தி 31 March 2022 10:34 PM IST (Updated: 31 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் தலைநிமிர தன்னம்பிக்கை வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பெண்கள் தலைநிமிர தன்னம்பிக்கை வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தையல் பயிற்சி சான்றிதழ்
அரியாங்குப்பத்தில் தனியார் தையல் பயிற்சி நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் முன்னிலை வகித்தார். தையல் பயிற்சி பெற்ற ஏழை மாற்றுத்திறனாளி பெண்களுக்கு   தையல்  மிஷின் மற்றும் சான்றிதழ்களை  கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பெண்கள் எதற்காகவும் மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. பெண்களை குறைவாக நினைக்கும் சமுதாய சிந்தனை இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
தன்னம்பிக்கை வேண்டும்
பெண்களுக்கான முழு அதிகாரமும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு யார் மரியாதை கொடுக்க மறுக்கிறார்களோ, அவமதிக்கிறார்களோ அவர்கள் தலைகுனியும் அளவிற்கு பெண் சமூகம் முன்னேற்றமடைய வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் தலை நிமிர வேண்டும் என்பது என்னுடைய ஆவல். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். 
பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது தன்னம்பிக்கை வந்துவிடும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதை தையல் பயிற்சி திறமை கொண்டு தொழில் செய்வது உள்பட கைத்தொழில்கள் நமக்கு பலன் அளிக்கும். பெண்கள் யாருக்காகவும் தலைகுனிய கூடாது. தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story