முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 March 2022 10:50 PM IST (Updated: 31 March 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

போலி பத்திரம் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

போலி பத்திரம் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கியின் முன்னாள் மேலாளர்  உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மோசடி வழக்கு
புதுச்சேரி காலாப்பட்டில் யூகோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு போலி பத்திரம் மூலம் முதலியார்பேட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான கணேசன் என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னாள் வங்கி மேலாளர் தென்னரசு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தண்டனை
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 
இதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசன், தென்னரசு ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,  ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார். 
இந்த வழக்கில் அரசு தரப்பில் பிரவீன்குமார் ஆஜரானார்.

Next Story