அயனாவரத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


அயனாவரத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2022 2:34 AM IST (Updated: 1 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

அயனாவரத்தில் பிளஸ்-1 மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க நகர்,

சென்னை அயனாவரம் பெருமாள் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கமல்ராஜ். டெய்லர். இவரது மனைவி தாட்சாயினி. இவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பு படிக்கும் பவதாரணி(வயது 16) என்ற மகளும், பவன் கல்யான் என்ற மகனும் உண்டு. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி இறந்து விட்டார். இந்நிலையில் கமல்ராஜ் மகள், மகனும் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்று விட்டார். பவதாரணி தனது தம்பியுடன் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரது தம்பி டியூஷன் சென்ற நிலையில், கமல்ராஜ் வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பவதாரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மாணவி எழுதிய கடிதம்

இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதிய கடிதம் கையில் சிக்கியது. அதில், ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என எழுதப்பட்டு இருந்தது. இதற்கிடையே, தாய் இறந்த துக்கத்தில் பவதாரணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்த திருவொற்றியூரை சேர்ந்தவர் நேதாஜி (33) என்பவர் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story