சுங்கக்கட்டணம் உயர்வு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
சுங்கக்கட்டணம் உயர்வு: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60 கி.மீ.க்கு குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை, சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியிருந்ததது.
இந்நிலையில், ஏப்ரல் 1-ந் தேதியில் (இன்று) இருந்து சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயரும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உயர்வை தொடர்ந்து சுங்கக்கட்டணமும் உயர்த்தப்படுவதால் சரக்கு ஊர்திகள் வாடகை கட்டணத்தை உயர்த்தும். அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய பா.ஜ.க. அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story