கிராமங்களை தேடி ஆஸ்பத்திரிகள் புதிய திட்டத்துக்காக 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்
கிராமங்களை தேடி ஆஸ்பத்திரிகள் என்ற புதிய திட்டத்துக்காக 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இழப்பீடாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து புதிய நடமாடும் மருத்துவ குழு வாகனங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிராமங்களை தேடி ஆஸ்பத்திரிகள்
தொலைதூர கிராமங்களுக்கும் மருத்துவ சேவையை கொண்டு போய் சேர்க்கின்ற வகையில் 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டு, அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்த வாரம் இந்த வாகனங்களை முதல்-அமைச்சர் பயன்பாட்டு கொண்டு வருவார். ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவம் சார்ந்த களப்பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு வாகனம் மூலம், ஒரு மாதத்துக்கு 40 மருத்துவ முகாம்கள் கிராமப்புறங்களில் நடத்தப்படும். அதன்படி தமிழகத்தில் இருக்கிற சுமார் 80 ஆயிரம் கிராமங்களில் இந்த வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது கிராமங்களை தேடி ஆஸ்பத்திரிகள் என்ற வகையில் இந்த புதிய திட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 129 முன்கள பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் மத்திய அரசு சார்பில் ரூ.64.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. 39 பேருக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும், உலக நாடுகளை பொறுத்தவரை அச்சநிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கிறது.
புதிய மருத்துவக்கல்லூரிகள்
அந்தவகையில், தமிழகத்தில் இன்னொரு அலை உருவாகாமல் தடுப்பதற்கும், தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவும் தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாக தமிழக அரசு செய்து வருகிறது.
இந்தநிலையில், 27-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 50 லட்சம் பேரும், 2-வது தவணை செலுத்திக்கொள்ளாத 1.30 கோடி பேரும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மருத்துவத்துறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டேவியாவை டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருக்கிறோம். அதில், முக்கியமாக பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைத்து தர வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
மத்திய மந்திரியுடன் சந்திப்பு
அதேபோல், உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களுக்கு இந்தியாவிலேயே அவர்களது மருத்துவ கல்வியை தொடர உதவுவது அல்லது போலந்து போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படிக்க உதவுவது, மதுரை, கோவையில் புதிய எம்ய்ஸ் கல்லூரி அமைப்பது, நீரிழிவு நோய்க்கு தமிழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்கு அங்கீகாரம் வழங்குவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதன் அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மந்திய மந்திரியை சந்திக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எழிலன் எம்.எல்.ஏ., பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story