பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சம்: ரூ.98-ஐ நெருங்கும் டீசல் விலை
பெட்ரோல் விலை நேற்றும் அதிகரித்து, தொடர்ந்து உச்சத்திலேயே பயணிக்கிறது. டீசல் விலை ரூ.98-ஐ நெருங்குகிறது.
சென்னை,
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதத்துக்கு பிறகு, கடந்த 22-ந் தேதி முதல் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த 24-ந் தேதி மட்டும் அதன் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்ட நிலையில், அதன்பின்னர் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
பெட்ரோல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி தான் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. அந்த விலையையும் நேற்று முன்தினம் கடந்து வரலாறு காணாத உச்சத்தை பெட்ரோல் விலை தொட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் பெட்ரோல் விலை அதிகரித்து, தொடர்ந்து உச்சத்திலேயே பயணிக்கிறது.
லிட்டருக்கு தலா 76 காசு உயர்வு
சென்னையில் நேற்று லிட்டருக்கு 76 காசு உயர்ந்து ஒரு லிட்டர் 107 ரூபாய் 45 காசுக்கு விற்பனை ஆனது. இதேபோல், டீசலும் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 97 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) விலை அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108, டீசல் ரூ.98 என்ற விலையை கடந்துவிடும்.
கடந்த 22-ந் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்க்கும் போது, நேற்று வரையிலான இடைப்பட்ட நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 9 காசும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story