சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 1 April 2022 6:30 AM IST (Updated: 1 April 2022 6:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

அந்த வகையில் 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 22-ம் தேதியில் அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எற்படவில்லை. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45 காசுகளுக்கும், டீசல் 97 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Next Story