நெல்லை: இளம்பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற உறவினர் - பகீர் வாக்குமூலம்


நெல்லை: இளம்பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற உறவினர் - பகீர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 April 2022 8:05 AM IST (Updated: 1 April 2022 8:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இளம்பெண் கொலையில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை, 

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 25). இவருடைய பெற்றோர் இறந்ததால், பிரியா தனது பாட்டி கிளி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் அதே தெருவில் வசித்து வந்த உறவினரான பேச்சி மகன் பசுபதி என்ற பாண்டி (35) நேற்று முன்தினம் பிரியா வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை சுத்தியலால் அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் பாண்டி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

கைதான பாண்டி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பிரியா வெகுளித்தனமாக யாரை பார்த்தாலும் சிரிப்பது வழக்கம். இந்த நிலையில் எனக்கும், பிரியாவுக்கும் திருமணம் நடத்த இருவீட்டாரும் ஏற்பாடு செய்தனர். இதனால் யாரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று பிரியாவிடம் அறிவுறுத்தினேன்.

இதுதொடர்பாக எங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் பிரியாவை சுத்தியலால் தாக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இவவாறு பாண்டி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story