திண்டுக்கல்: தாய்-மகன் கொடூரமாக வெட்டிக் கொலை..!
திண்டுக்கல் அருகே தாயும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம் (62). அவரது மகன் செல்வம் (42) அருகே உள்ள தனது சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் சௌந்தரம் மற்றும் செல்வம் தோட்டத்து வேலையை முடித்துவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்த உள்ளார்கள். அதிகாலை அவரது மனைவி அவருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது சுவிட் அப் என்று வந்ததினால் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது தாய் மகன் இருவரும் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது
உடனடியாக எரியோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அவர்கள் தோட்ட வீட்டில் தேங்காய் பரிவதற்காக வந்த நபர் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவர்கள் பணம் கேட்டு உள்ளதாகவும் அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், மேலும் வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story