ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்...!


ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 1 April 2022 4:30 PM IST (Updated: 1 April 2022 4:22 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

அருப்புகோட்டை,

மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாக்யம் (வயது 48). லோடுமேன் வேலை செய்து வருகிறார். பாக்கியம்  துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோ அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிந்த போது பின்னால் வந்து லாரி ஆட்டோ மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து ஆட்டோவில் பயணம் செய்த முத்துமீனாள் (வயது 48), கற்பகம் (52), அங்காளம்மாள் (50), காளியம்மாள் (60),முருகன் (40) ஆட்டோ டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story