சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலையும் அவர் இன்று சந்தித்து பேசியுள்ளார். இதன்பின், கெஜ்ரிவாலுடன் டெல்லியில் உள்ள மாதிரி பள்ளி கூடங்களுக்கு நேரில் சென்று அவற்றை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதேபோன்று சமூக சுகாதார சேவை மையங்களாக செயல்பட்டு வரும் டெல்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளையும் அவர் பார்வையிட்டார்.
இந்நிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் தொழில் வலிமை (#BusinessBlasters) முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்.
தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! செழுமைப்படுத்துங்கள்! என்று கூறியுள்ளார்.
தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 1, 2022
சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! செழுமைப்படுத்துங்கள்! pic.twitter.com/0Ywu9hfQJz
Related Tags :
Next Story