கடலில் மூழ்கிய விசைப்படகு


கடலில் மூழ்கிய விசைப்படகு
x
தினத்தந்தி 1 April 2022 11:55 PM IST (Updated: 1 April 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே விசைப்படகு கடலில் மூழ்கியது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் ஜெய்கணேஷ், சிவராமன், சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை எதிர்பாராத விதமாக அந்த படகு கடலில் மூழ்கியது. கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் இருந்த படகு இழுத்துச்செல்லப்பட்டு கடலில் மூழ்கியதா? அல்லது மர்மநபர்கள் யாரேனும் படகில் ஓட்டை போட்டு தண்ணீர் செல்ல வழி செய்தனரா? என்பது குறித்து தெரியவில்லை. 
இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மரக்காணம் போலீசாரும், கடலோர காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story