இருக்கன்குடி கோவிலின் 27¼ கிலோ நகையை வங்கியிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர்


இருக்கன்குடி கோவிலின் 27¼ கிலோ நகையை வங்கியிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 2 April 2022 1:37 AM IST (Updated: 2 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி கோவிலுக்கான பயன்படுத்த இயலாத 27¼ கிலோ நகையை தங்கக்கட்டிகளாக்கி வங்கியில் முதலீடு செய்யும் திட்ட விழாவில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு பங்கேற்று வங்கி நிர்வாகத்திடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 27 கிலோ 236 கிராம் தங்க நகையை சுத்த தங்க கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆண்டுக்கான முதலீடாக செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி இருக்கன்குடி கோவிலில், ஓய்வுபெற்ற நீதிபதி மாலா தலைமையில் நேற்று நடைபெற்றது.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், கோவில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட தங்க நகைகளை சாத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

ரூ.24 லட்சம் வட்டி

பின்னர் அமைச்சர்கள் கூறும்போது, இருக்கன்குடி கோவிலுக்கு சொந்தமான 27 கிலோ 236 கிராம் நகைகளை தங்கக்கட்டிகளாக்கி, 5 ஆண்டுக்கு முதலீடு செய்வதன் மூலம் மாதம்தோறும் ரூ.2 லட்சம் வீதம் வட்டியாக ஆண்டுக்கு ரூ.24 லட்சம் கிடைக்கப்பெறும். இந்த வட்டித் தொகை கோவிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கோவில் திருப்பணி மற்றும் கோவில் சார்ந்த இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறினர்.

Next Story