15-வது நாளாக உயிரிழப்பு இல்லை; தமிழகத்தில் 32 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து 15-வது நாளாக நேற்றும் கொரோனா உயிரிழப்பு இல்லை.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 27 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்கள் 16 பேர் உள்பட 32 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று 25 மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.
இதில் 7 மாவட்டங்களில் தொடர்ந்து ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் கொரோனா பாதித்தோர் சிகிச்சையிலும் இல்லை. தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 293 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15-வது நாள்
தமிழகத்தில் தொடர்ந்து 15-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 45 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story