தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகள் தனி ஒதுக்கீடு அரசு உத்தரவு


தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகள் தனி ஒதுக்கீடு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2022 5:32 AM IST (Updated: 2 April 2022 5:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகளை தனி ஒதுக்கீடாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பஸ்களில், அதாவது படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத பஸ்கள் ஆகியவற்றில், பெண்களுக்கு தனியாக படுக்கை எண்.1 எல்.பி. மற்றும் 4 எல்.பி. ஆகிய படுக்கைகளை ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புறப்படும் வரை...

எனவே இனிவரும் காலங்களில் அந்த படுக்கைகளில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதை ஒதுக்கீடு செய்து தரவும், பஸ் புறப்படும் வரை அந்த படுக்கைகளில் பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் அதை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்துதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story