திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் கோலாகலம்
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள, பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும்.
இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி இன்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளினர்.
தேரை அதிகாரிகள், பிரமுகர்கள் பலர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.பழனியாண்டி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story