திருவாரூர்: சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்....!


திருவாரூர்: சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்....!
x
தினத்தந்தி 2 April 2022 2:45 PM IST (Updated: 2 April 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி, 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு சுதா, என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இவருடைய அண்ணன் தங்கராஜ் குடும்பத்திற்கும் முருகேசன் குடும்பத்திற்கும் பத்திரிகையில் பெயர் போடுவது சம்பந்தமாக பிரச்சனை இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் பெயிண்டிங் வேலைக்கு செல்வதற்காக முருகேசன் சக தொழிலாளிகளுடன் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் (வயது 32) முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது சொந்த சித்தப்பா முருகேசனை குத்தியுள்ளார். இதில் நெஞ்சுப் பகுதியில் பலத்த கத்தி குத்து விழுந்ததில் முருகேசன் நடுரோட்டில் சரிந்துவிழுந்தார்.

பின்னர், அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகேசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனை அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் அருகே உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் அங்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீசார், சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story