வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை - ஈபிஎஸ்


வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை - ஈபிஎஸ்
x
தினத்தந்தி 2 April 2022 3:03 PM IST (Updated: 2 April 2022 3:03 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


சேலம்,

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது;

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் திமுக அரசு சரியாக வாதாடவில்லை. உள்ஒதுக்கீடு நிறைவேற கூடாது என்பதற்காக திட்டமிட்டு சரியாக வாதாடவில்லை. உள் ஒதுக்கீடு வழக்கில் சரியான தரவுகளை வழக்கறிஞர் வழங்கவில்லை என்று வழக்கை விசாரித்த நீதியரசரே கூறியுள்ளார். 

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேவையான தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இந்த திட்டத்தை அதிமுக கொண்டுவந்த காரணத்தினால், இதனை நிறைவேற்றக்கூடாது என்று திமுக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.


Next Story