வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி
புதுவை பெத்துசெட்டிபேட்டை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மகள் தனலட்சுமி (வயது 30). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றார். இ்ந்தநிலையில் மகன் நிதிசுடன் (5) தனது தாய்வீட்டில் தனலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கணவரை பிரிந்த அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். கணவனை பிரிந்த ஏக்கமும் அவரை வாட்டி வதைத்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story