மதுரை: குறைந்த விலையில் தங்க பிஸ்கட் - ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல்


மதுரை: குறைந்த விலையில் தங்க பிஸ்கட் - ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல்
x
தினத்தந்தி 3 April 2022 7:32 AM IST (Updated: 3 April 2022 7:32 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினதைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் சண்முகம் சங்கரலித்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலையில் தங்க பிஸ்கட் வாங்கித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

இதனை நம்பிய சண்முகம் 5 லட்ச ரூபாயுடன் உசிலம்பட்டி வந்துள்ளார். அங்கு தங்க பிஸ்கட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது சில மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் என்று கூறிக்கொண்டு அவர்களை மிரட்டி ஐந்து லட்ச ரூபாய் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றிக்கொண்டனர். 

பின்னர் தங்க பிஸ்கட் வாங்க வந்த சண்முகத்தை உசிலம்பட்டி காவல் நிலையம் வரும்படி கூறிவிட்டு உடனிருந்த சங்கரலிங்கம் மற்றும் இந்த மோசடலில் ஈடுபட்ட சிலரை தங்கள் இருசக்கர வாகனத்தை ஏற்றிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

இந்த நிலையில் சண்முகம் உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு இது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் இது சம்பந்தமாக போலீசார் யாரும் வரவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து அதிற்சியடைந்த சண்முகம் போலீசாரிடம் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story