மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வரும் 7 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற 7 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையை தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 8 செண்டி மீட்டர் மழையும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 6 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story