உழவர் சந்தையில் எம்.எல்.ஏ ஆய்வு : காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண் விவசாயி....!
ஆத்தூர் உழவர் சந்தையில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ ஜெயசங்கரன் காலில் விழுந்து பெண் விவசாயி கோரிக்கை வைத்தார்.
ஆத்தூர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தையில் ஆத்தூர், கருமந்துறை, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் எம்.எல்.ஏ ஜெயசங்கரன் இன்று உழவர் சந்தையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுசிலா என்ற விவசாயி தனக்கு கடை ஒதுக்கி தராமல் இழுத்தடிப்பதாகவும், 7 மணிக்கும் மேல் கடை ஒதுக்கப்படுவதால் வியாபாரம் செய்ய முடியவில்லை என கண்ணீருடன் குற்றம்சாட்டினார். பின்னர், திடீரென எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் காலில் விழுந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பாக எம்எல்ஏ ஜெய்சங்கரன் கூறியதாவது,
இந்த உழவர் சந்தை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. உழவர் சந்தையில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிக அளவில் கடைகள் போட்டுள்ளனர்.
விலை நிர்ணயத்திலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பெண் விவசாயிகளை அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story