திருச்சி: பழங்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து - சாலையில் சிதறிக்கிடந்த பழங்கள்....!


திருச்சி: பழங்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து - சாலையில் சிதறிக்கிடந்த பழங்கள்....!
x
தினத்தந்தி 3 April 2022 4:15 PM IST (Updated: 4 April 2022 12:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே பழங்கள் ஏற்றி சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

திருச்சி,

திருச்சியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி பழங்கள் ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று சென்றது. இந்த வேன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மினிவேன் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில் சாலையில் கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் இருந்த பழங்கள் அனைத்தும் சாலையில் சிதறிக் கிடந்தது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்கு உள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக வேனின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



Next Story