சார் பதிவாளர் சாவில் சந்தேகம்


சார் பதிவாளர் சாவில் சந்தேகம்
x
தினத்தந்தி 3 April 2022 11:43 PM IST (Updated: 3 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பத்திர பதிவுத்துறை சார் பதிவாளர் சாவில் சந்தேகம் உள்ளதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி பத்திர பதிவுத்துறை சார் பதிவாளர் சாவில் சந்தேகம் உள்ளதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சார் பதிவாளர்
புதுச்சேரி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 58). சாரம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், 2 மகன்களும்  உள்ளனர்.
இன்று காலை வீட்டில் இருந்தபோது உலகநாதன் திடீரென்று மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உலகநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சாவில் சந்தேகம்
அதைத்தொடர்ந்து உலகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், உலகநாதன் சாவில் சந்தேகம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் உருளையன்பேட்டை போலீசுக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் உலகநாதன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story