1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் அமைச்சர் உறுதி


1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 4 April 2022 1:31 AM IST (Updated: 4 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

‘‘1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

நீட் தேர்வு

நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் விலக்கு பெற முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிகரமாக முடிந்தது’’.

இவ்வாறு அவர் கூறினார். .

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது என நேற்று முன்தினம் தகவல் பரவிய நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story