11 பெண்கள் பலி: மினிவேன் தீ வைத்து எரிப்பு தடயத்தை அழிக்க சதியா?
திருப்பத்தூர் அருகே 11 பேர் இறப்புக்கு காரணமான மினிவேன் தீவைத்து எரிக்கப்பட்டது. விபத்துக்கான தடயத்தை அழிக்க நடந்த சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதி நெல்லிவாசல்நாடு ஊராட்சியில் உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 35 பேர் நேற்று முன்தினம் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்காக மினிவேனில் சென்றனர்.
மினிவேனை பரந்தாமன் என்பவர் ஓட்டி சென்றார். மினிவேன் மலைப்பாதையில் சாலைவசதி இல்லாத ஜல்லி கற்கள் கொண்ட சாலையில் மேல்நோக்கி சென்ற போது பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 11 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயத்துடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே இடத்தில் அடக்கம்
இறந்த 11 பேரின் உடல்களும் நேற்று முன்தினமே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் புலியூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 11 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறந்தவர்களின் உறவினர்கள் விடிய விடிய கதறி அழுதவாறு இருந்தனர்.
மினிவேன் எரிப்பு
இதனிடையே விபத்துக்குள்ளான மினிவேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
11 பேரை பலிவாங்கிய வேன் என்று ஆத்திரத்தில் எரிக்கப்பட்டதா? அல்லது விபத்துக்கான காரணத்தை மறைப்பதற்காக தடயத்தை எதுவும் அழிக்க எரிக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story