மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநில மின்துறையில் கடந்தவாரம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். அரசின் இந்த போக்கை கண்டித்து காரைக்கால் மின்துறை அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின்துறை அலுவலக வாயிலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த ஊழியர் பழனி தலைமை தாங்கினார். ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கொண்டு பணியமர்த்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்தியதை நீக்கி இளைஞர்களுக்கு மின் துறையில் வாய்ப்பு வழங்க வேண்டும், மின் துறையை தனியார் மயமாக்குவதை உடனே கைவிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story