மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள நுழைவுத்தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-23-ம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும். 12-ம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், 12-ம் வகுப்பு என்பது நுழைவுத்தேர்வுக்கான தகுதித்தேர்வு போல் ஆகிவிடும். இதன்மூலம் ஏழை-எளிய, கிராமப்புற மாணவ-மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ரத்து செய்ய நடவடிக்கை
இந்த நுழைவுத்தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல், இதனை திரும்பப்பெற தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்கவேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலை பிடித்ததன் காரணமாக ஏழை-எளிய கிராமப்புற மாணவ-மாணவியர் தற்போது அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத்தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலம் தாழ்த்தாமல் நுழைவுத்தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது. எனவே, முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச்சென்று, தேவையான அழுத்தத்தை கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story