வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
கோடை வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.
சென்னை,
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து விலங்குகளுக்கும் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வெப்ப நாட்களில் விலங்குகளை பராமரிப்பதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுக்கான தனித்துவமான மற்றும் புதுமையான கோடைகால மேலாண்மைத் திட்டத்தைப் பின்பற்றி வருகிறோம். அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு உள்ளது.
முன் ஏற்பாடுகள்
காண்டாமிருகம், யானை, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, மனித குரங்கு உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்கு ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பறவைகளின் கூட்டுகளுக்கு மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்குகள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைய வைத்த பழங்களும் வழங்கப்படுகின்றது.
அதிக வெப்பம் இருக்கின்ற போதிலும், வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றிற்காக பனித்தூரல் மற்றும் மூடுப்பனி அமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. பாம்புகளுக்கு பல அடுக்குகளில் மண்மேடு அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பூங்காவிற்கு வருகைத்தரும் பார்வையாளர்களை குளிரூட்டும் விதமாக ‘ஷவர்’ பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story