தமிழகத்தில் இதுவரை ரூ.4,800 கோடி நகை கடன் தள்ளுபடி அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தமிழகத்தில் இதுவரை ரூ.4,805 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலி நகைகள்
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, அந்த வங்கிகளில் வைக்கப்பட்ட போலி நகைகள் மற்றும் முறைகேடாக பெற்ற நகை கடன் போன்ற மோசடிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ.4,800 கோடி நகை கடன் தள்ளுபடி
தமிழ்நாடு முழுவதும் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு, ரூ.4,805 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மீதம் உள்ள பயனாளிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர்க்கடன் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story