திண்டுக்கல்: ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது....!


திண்டுக்கல்: ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது....!
x
தினத்தந்தி 5 April 2022 2:00 PM IST (Updated: 5 April 2022 1:59 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வடமாநில வாலிபர்களை திண்டுக்கல் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி, 

திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி (பொறுப்பு), தனிப்பிரிவு போலீசார் ராஜேஷ் குமார், ஏட்டு செல்லத்துரை மற்றும் போலீசார் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் வந்தது. போலீசார் ரெயில் பெட்டியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்களிடம் இருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர ஓரான் (வயது 23) சந்தீப் குமார் லோஹரா (24) என்பதும் விற்பனைக்காக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



Next Story