உற்சாகமாக வாலிபால் விளையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாலிபால் விளையாடி அசத்தியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள பெரிய கொழுவாரி கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர், அங்குள்ள புதிய குடியிருப்புகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் திறந்து வைத்து, அங்குள்ள பயனாளிகளின் கையில் வீட்டின் சாவியையும் வழங்கினார்.
மேலும், இந்த சமத்துவபுரத்தில் உள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடலை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு கூடியிருந்த இளைஞர்களின் மத்தியில் வாலிபால் விளையாடி அசத்தினார்.
அதன்படி இளைஞர்கள் வாலிபாலை முதல்-அமைச்சரிடம் தந்த நிலையில், அதனை ஆர்வமாக பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சர்வீஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது, சிறிது நேரம் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடினார். முதல்-அமைச்சர் இப்படி, வாலிபால் விளையாடியது, தற்போது சமூக வலைதளதில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story