திருவாரூர்: திருமணத்திற்கு முதல் நாள் தற்கொலை செய்த புதுமண பெண் - போலீசார் விசாரணை....!


திருவாரூர்: திருமணத்திற்கு முதல் நாள் தற்கொலை செய்த புதுமண பெண் - போலீசார் விசாரணை....!
x
தினத்தந்தி 5 April 2022 3:15 PM IST (Updated: 6 April 2022 11:51 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே திருமணத்திற்கு முதல் நாள் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் தேவதர்ஷினி (வயது 21). இவருக்கும் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தேவதர்ஷினி தனது வீட்டில் நேற்று காலை 7 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தூக்கில் தொங்கிய தேவதர்ஷினியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவதர்ஷினி ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவட இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story