சாத்தூர் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து...!
சாத்தூர் அருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் மருதுபாண்டி நகரில் குணசேகரன் (வயது 55) என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார்.
இந்த தீப்பெட்டி ஆலை 30 ஆண்டுகளாக மருதுபாண்டி நகரில் இயங்கி வருகிறது. இங்கு மருந்து குச்சியை வாங்கி தீப்பெட்டியில் அடைக்கும் வேலை நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று 6 நபர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது வேலையாட்களுக்கு தேவையான மருந்து குச்சிகளை தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் இறக்கியுள்ளார். இறக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு தீ பற்றி உள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து தீப்பெட்டி ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள மருந்து குச்சி மற்றும் இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story