தனி கல்வி கொள்கை உருவாக்குவது, தமிழகத்திற்கு பெருமைக்குரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை,
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது.
நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி கொள்கை உருவாக்கப்படும்.
தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் இதுவரை நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என்றார்.
Related Tags :
Next Story