மத்திய அரசிடம் இருந்து 48 ஆயிரம் டன் நிலக்கரி தான் கிடைக்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி தான் கிடைக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை,
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 48 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது.
இந்த ஆண்டில் தமிழகத்துக்குத் தேவையான 17,300 மெகா வாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.
நிலக்கரி பற்றாக்குறையை போக்குவதற்காக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி 4.8 டன் இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story