ரூ.54 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி


ரூ.54 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 5 April 2022 9:55 PM IST (Updated: 5 April 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

மணவெளி தொகுதியில் ரூ.54 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

மணவெளி தொகுதி அரவிந்தர் நகர் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தொகுதி எம்.எல். ஏ.வும், சபாநாயகருமான செல்வம் நடவடிக்கையால் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.54 லட்சம் மதிப்பில் அந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதன் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவில் சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் சிற்றரசு, உதவி பொறியாளர் அனில்குமார், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story