காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ரெயில் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், மோகனவேல், வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பையன், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி, மாவட்ட ஓ.பி.சி பிரிவு தலைவர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story