சார் பதிவாளர் கொலை செய்யப்பட்டாரா?


சார் பதிவாளர் கொலை செய்யப்பட்டாரா?
x
தினத்தந்தி 5 April 2022 10:58 PM IST (Updated: 5 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் உயிரிழந்த சார் பதிவாளருக்கு கழுத்து எலும்பு முறிந்திருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் உயிரிழந்த சார் பதிவாளருக்கு கழுத்து எலும்பு முறிந்திருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார் பதிவாளர் மர்மசாவு
புதுச்சேரி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 58). சாரம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்த போது உலகநாதன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் மர்மச்சாவு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குடும்பத்தினரிடம் விசாரணை
இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், உலகநாதனுக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. வெளிக்காயம் எதுவும் இல்லை. எனவே அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
சாவில் சந்தேகம் இருப்பதால் உலகநாதன் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து துப்புதுலக்கி வருகின்றனர்.

Next Story