300 சதவீதம் சொத்துவரி உயர்த்தி வசூலித்த அ.தி.மு.க. எங்களை குற்றம்சாட்டுவதா? அமைச்சர் கேள்வி
தங்களின் ஆட்சிக்காலத்தில் 300 சதவீதம் சொத்துவரி உயர்த்தி வசூலித்த அ.தி.மு.க. எங்களை குற்றம்சாட்டுவதா என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-23-ம் ஆண்டு முதல், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறுவதற்காக 2021-22-ம் ஆண்டு சொத்துவரி தள விகிதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களின்கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சொத்துவரி குறித்த அறிவிக்கைகளை வெளியிட வேண்டும் என்பது கட்டாயம் என்றும் திட்ட வழிமுறைகளை மத்திய அரசு வகுத்தளித்துள்ளது.
2018-ம் ஆண்டு சொத்துவரியை 50 சதவீதம், 100 சதவீதம் என்று அ.தி.மு.க. அரசு ஒரேயடியாக உயர்த்தியது. அந்த ஆண்டில் வரி சீராய்வு செய்தபோது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் என்று வரி உயர்த்தினார்கள். மறு ஆண்டு தேர்தல் வந்த காரணத்தால் அந்த வரி உயர்வை நிறுத்திவைத்தனர்.
சீராய்வுக்கு பின்னர்...
தற்போது நாங்கள் அதை சீராய்வு செய்து, ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் நகர்ப்புறத்தில் உள்ள 83 சதவீத வீடுகளுக்கு 25 முதல் 50 சதவீத சொத்துவரி உயர்வு விதித்துள்ளோம்.
நகர்ப்புறங்களில் உள்ள 77.87 லட்சம் வீடுகளில் 44.54 லட்சம் குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 19.23 லட்சம் குடியிருப்புகளுக்கு 50 சதவீத வரி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 83 சதவீத மக்களை இந்த வரி உயர்வு பாதிக்காது.
7 சதவீத வீடுகளுக்கு மட்டும்தான் 100 முதல் 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1.4 சதவீத குடியிருப்புகள் மட்டுமே 150 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகியுள்ளன.
தற்போது கட்டிடம், காலியிடம் ஆகியவற்றை பிரித்து வரி நிர்ணயம் செய்துள்ளோம். 83 சதவீத மக்களுக்கு இந்த வரி பாதிப்பை ஏற்படுத்தாது.
சென்னை
சென்னையில் 11.03 லட்சம் குடியிருப்புகளில் 1.52 லட்சம் குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 3.46 லட்சம் குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 3.12 லட்சம் குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்படும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு மிகவும் குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி அளவுக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு தற்போது குறைந்தபட்சமாக ரூ.810 சொத்துவரியாக வசூலிக்கப்படுகிறது. சீராய்வுக்கு பிறகு இது ரூ.1,215 ஆக உயரும். ஆனால் வேறு மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகளில் இது ரூ.3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் 600 சதுர அடி அளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக வசூலிக்கப்படும் சொத்து வரி ரூ.3,240. இது சீராய்வுக்குப் பிறகு ரூ.4,860 ஆக உயரும். மற்ற மாநிலங்களில் உள்ள புனே உள்ளிட்ட மாநகராட்சிகளில் இது ரூ.15 ஆயிரத்தை தாண்டுகிறது. மும்பையில் இது ரூ.84 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளது. கோவையில் இதே அளவு கட்டிடத்துக்கு குறைந்தபட்சமாக வசூலிக்கப்படும் ரூ.204, சீராய்வுக்கு பிறகு ரூ.255 ஆக உயரும். அதிகபட்ச கட்டணம் ரூ.972-ல் இருந்து ரூ.1,215 ஆக உயரும்.
வரி உயர்வு அவசியம்
1987-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 100, 200 மற்றும் 300 சதவீதம் என்ற அளவுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டது. 1993-ம் ஆண்டும் அவர்கள் ஆட்சியில் 50, 100, 150, 200 சதவீதம் என சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால் அவர்கள் இன்று 25, 50, 100, 150 சதவீதம் சொத்துவரி உயர்த்திய எங்களை குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story