இறந்து போனதாக கூறப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை
இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட நபர் யார்? என்பதை கண்டறிய உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டுவதற்காக வீட்டை விட்டு சென்ற மூர்த்தி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனை அறிந்த மூர்த்தியின் மகன் கார்த்தி மற்றும் அவருடைய உறவினர்கள் இறந்து கிடந்தவரின் உடலை பார்த்தபோது அது மூர்த்தி போல இருந்துள்ளது.
இதனால் இறந்து கிடந்தவர் தனது தந்தை மூர்த்திதான் என கார்த்தி உறுதி செய்தார். இதையடுத்து அந்த உடலை எடுத்து வந்து சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
உயிருடன் வந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூர்த்தி உயிருடன் வீடு திரும்பினார். அவரை நேரில் கண்டதும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் மூர்த்தி உயிருடன் உள்ளதை அறிந்ததும் அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதற்கிடையே இறந்துபோனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் வந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மூர்த்தியை காண திரண்டு வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கரும்பு வெட்டுவதற்காக மூர்த்தி சென்றதும், அங்கு வேலை முடிந்ததால் வீட்டுக்கு வந்ததும்,’ தெரியவந்தது.
இறந்தவர் யார்?
மூர்த்தி உயிருடன் வந்ததால் இறந்தவர் யார்? என்ற குழப்பம் போலீசாரிடையே ஏற்பட்டு உள்ளது. எனவே இறந்தவர் யார்? என்பதை கண்டறிய, உடலை தோண்டி எடுத்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story