வளர்ச்சிக்கான நிதியை பெற சொத்துவரியை உயர்த்த வேண்டியது அவசியம் கி.வீரமணி அறிக்கை
வளர்ச்சிக்கான நிதியை பெற சொத்துவரியை உயர்த்த வேண்டியது அவசியம் கி.வீரமணி அறிக்கை.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எந்த அரசும் வரி போடாமல் ஆட்சி செய்ய முடியாது. அந்த வகையில் 15-வது நிதிக்குழு, தமிழகத்துக்கு நிதி உதவி தர வேண்டும் என்றால், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள நகர்ப்புற சொத்துவரியை உயர்த்தியே ஆக வேண்டும். வளர்ச்சிக்கான நிதியை பெறவே இந்த நிபந்தனையை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
சொத்துவரி உயர்த்தியதற்கு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை எதிர்ப்பு என்ற போராட்ட வேடம் கட்டி ஆடுகிறார். மத்திய அரசு தான் வரி போட நிபந்தனையிட்டு, உள்ளாட்சி நிதி மானியம் தர ஆணையிட்டது. இப்போது இதை மாநில அரசு செயல்படுத்தும்போது, போராட்டம் என்பது ஏமாற்று வேலையின்றி வேறு என்ன? இதை பார்க்கும்போது பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
அதேவேளை வளர்ச்சி என்பதற்கு வரி தேவை. அது ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்பதாக அமைய வேண்டும். இதில் தமிழக அரசும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story