சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9-ந் தேதி தாக்கல்
6 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ மாமன்றத்தில் வரும் 9-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான ‘பட்ஜெட்’ கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அப்போதைய கமிஷனர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது.
இதனால் பெரிய அளவில் புதிய திட்டங்கள் இல்லாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றனர். இதையடுத்து சென்னையின் 49-வது மேயராக ஆர்.பிரியா பதவி ஏற்றார்.
இதைத்தொடர்ந்து நிலைக்குழு, மண்டலக்குழு, நியமனக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் 9-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
6 ஆண்டுகளுக்கு பின்னர்...
இதற்காக சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ‘பட்ஜெட்டில்’ பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு தான் கடைசியாக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அன்றைய வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சந்தானம், அன்றைய மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்தார். அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சனிக்கிழமை (9-ந் தேதி), மாமன்ற கூட்டத்தில் ‘பட்ஜெட்’ அறிக்கையை மேயர் ஆர்.பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் (வார்டு எண்- 41) தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மக்கள் எதிர்பார்ப்பு...
சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அன்று தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தை தொடர்ந்து 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்படும்.
6 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சென்னை மாநகர மக்கள் மத்தியில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மிகுதியாக உள்ளது.
மேலும் சொத்து மற்றும் இதர வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இந்த ‘பட்ஜெட்டில்’ பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், மேம்பாலங்கள், புதிய திட்டங்கள் இடம்பெறும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story