பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் சதம் அடித்தது
பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் சதம் அடித்து இருக்கிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 18 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. பெட்ரோலை பொறுத்தவரையில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசுக்கு விற்பனையான விலைதான் புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதன் விலை வரலாறு காணாத உச்சமாக பதிவாகி வருகிறது.
தற்போது அந்த வரிசையில் டீசலும் இடம்பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 3-ந்தேதி ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்பட்டதுதான் இதுவரை அதிகபட்ச விலை உயர்வாக இருந்தது.
அதன் பின்னர், விலை குறைந்ததால், ஒரு லிட்டர் டீசல் ரூ.100-க்கு கீழ் வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதியில் இருந்து டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் விலையும் பெட்ரோலை போல ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்து இருக்கிறது.
பொருட்கள் விலை அதிகரிக்கும்
அதன்படி, நேற்றும் பெட்ரோல்- டீசல் விலை 13-வது நாளாக அதிகரித்து இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 9 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் நேற்று லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 18 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல்- டீசல் விலை கடந்த 13 நாட்களில் மட்டும் லிட்டருக்கு 8 ரூபாய் 69 காசும், 8 ரூபாய் 75 காசும் அதிகரித்து உள்ளது. பெட்ரோலை விட டீசல் விலை தான் அதிகமாக உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
டீசல் விலை உயர்வின் தாக்கம், அத்தியாவசிய பொருட்களின் மீது திரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே காய்கறி விலை இதன் காரணமாக சற்று அதிகரித்து உள்ளது. இதுபோல் மேலும் சில பொருட்களிலும் வரக்கூடிய நாட்களில் விலை உயர்வை காண முடியும்.

Related Tags :
Next Story