விழுப்புரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகளுடன் பெரியார் நினைவு சமத்துவபுரம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
விழுப்புரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் சமத்துவபுர வளாகத்தில் உள்ள பெரியாரின் உருவச்சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெயரில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட உன்னத திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும். கருணாநிதியால் விழுப்புரம் மாவட்டத்தில் 4 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. 5-வது சமத்துவபுரமாக 2010-2011-ம் நிதியாண்டில் கொழுவாரி ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது.
100 வீடுகள்
கொழுவாரி கிராமத்தில் சமத்துவபுரம் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பளவு 249 சதுர அடி, தலா ஒரு வீட்டின் மதிப்பு ரூ.1.92 லட்சம் என மொத்தம் 100 வீடுகள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பாக ரூ.14.20 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்ட பணிகள் ரூ.7.59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, கைப்பந்து மற்றும் கபடி மைதானம் உள்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் விளையாட்டுத்திடல் மற்றும் கலைஞர் விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் ரூ.3.42 மதிப்பீட்டில் மின் விளக்குகள், ரூ.7.64 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், அனைத்து தெருக்களிலும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
இதேபோல அந்த வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்து, ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நூலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர்க.பொன்முடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், து.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், எ.ஜெ.மணிகண்ணன், சி.சிவகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ம.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
விழாவில், ரூ.24 கோடியே 77 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Tags :
Next Story