ராணிப்பேட்டை: சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி- ஆறாக ஓடிய டீசல்....!


ராணிப்பேட்டை: சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி- ஆறாக ஓடிய டீசல்....!
x
தினத்தந்தி 6 April 2022 11:15 AM IST (Updated: 6 April 2022 10:40 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்த வெளியேறி டீசலால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து ராணிப்பேட்டையை நோக்கி டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி சாலையை கடக்க முயன்ற பசு மாட்டின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

அதிர்ஷ்டவசமாக லாரியின் டிரைவர் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான லாரியிலிருந்து ஆபத்தான முறையில் டீசல் வெளியேறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், லாரியின் மீது ரசாயன நுரை கலவையை தெளித்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விபத்தால் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும்  கிரேன் மூலம் கவிந்து கிடந்த டேங்கர் லாரியை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.


Next Story