தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 April 2022 7:41 PM IST (Updated: 6 April 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  சென்னையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் நேற்று 11 பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை 38,025 பேர் உயிரிழந்தனர்.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 258 ஆக குறைந்தது . 29 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story